Reporting Live Today: உண்மையை நிலைநாட்ட ஒரு பத்திரிகையாளர் போராட்டம்

நெட்ஃபிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ள மிக முக்கியமான திரைப்படம் ‘Reporting Live’ பாலிவுட் நடிகை பரிநீதி சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு விறுவிறுப்பான இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானரில் அமைந்துள்ளது.புதைக்கப்பட்ட சில கதைகள் ஒருபோதும் அழிவதில்லை என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் நடக்கும் விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக்கப் பார்ப்போம்.

Reporting Live Today: உண்மையை நிலைநாட்ட ஒரு பத்திரிகையாளர் போராட்டம்

கதையும் களமும்

Reporting Live திரைப்படம் ஒரு தைரியமான பெண் பத்திரிகையாளரின் போராட்டத்தைச் சுற்றி நகர்கிறது. இந்தப் படத்தில் பரிநீதி சோப்ரா ஒரு துடிப்பான நியூஸ் ரிப்போர்ட்டராக நடித்துள்ளார்.
படத்தில் முக்கிய விஷயம்கள்:

  • புதைக்கப்பட்ட மர்மம்: படத்தில் போஸ்டரில் உள்ள Some stories refuse to be buried என்ற வாக்கியம் உணர்த்துவது போல, பல முன்பு அதிகாரவர்க்கத்தால் முடி மறைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஊழல் நாயகி தற்செயலாகக் கண்டுபுடிக்கிறார் .
  • ஆபத்தான பயணம்: அந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அவர் எடுக்கும் முயற்சிகள் அவர்க்குப் பல ஆபத்துக்களைக் கொண்டு வருகின்றன.பெரிய அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் முகத்திரையை அவர் கிழிப்பறை என்பதே மீதிக்கதை.
  • கட்டுமான ஊழல் பின்னணி: போஸ்டரில் காட்டப்பட்டுள்ள ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மணல் குவாரிகள் போன்றவை, இது ஒரு நிலம் சார்ந்த அல்லது கட்டுமானத் துறை சார்ந்த மிகப்பெரிய ஊழலை மையமாகக் கொண்டது என்பதை உணர்த்துகிறது.
  • நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பம்: துருவ் திரிபாதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில். பரிநீதி சோப்ராவுடன் இணைந்து மூத்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். ஜாசுவா சிசாத் மற்றும் பார்த்தா கிரண் தாக்கூர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் வெறும் ஊடகப் போராட்டத்தை மட்டும் காட்டாமல், இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியைத் திரைக்குப் பின்னல் இருந்து வெளிக்கொண்டு வருவதற்குப் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் உயிருக்கு ஆபத்தான சவர்களைத் தத்ரூபமாகப் படம்பித்துள்ளது.

Reporting Live ஏன் பார்க்க வேண்டும்?

பிரிஸ்வா சார்பாக இந்த படத்தை ஆய்வு செய்தபோது, இது ஒரு High-Stakes Investigation Drama என்பது தெளிவாகிறது. பொதுவாக பாலிவுட்டில் பத்திரிக்கையாளர் கதைகள் என்றால் Scoop போன்ற படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதெ வரிசையில் Reporting Live படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.சினிமா வட்டாரத் தகவல்களின்படி, இந்தப் படம் உண்மைச் சம்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.