டாப் 5 ஹாலிவுட் க்ரைம் & த்ரில்லர் திரைப்படங்கள் மிஸ் பண்ணாம பாருங்கள் !

சினிமா ரசிகர்களுக்கு கிரைம் மற்றும் கேங்ஸ்டர் படங்கள் என்றால் ஒரு தனி மவுசு தான். அதிலும் ஹாலிவுட் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்!ஆக்சன்,கூஷ்பம்ப்ஸ் கொருக்கும் காட்சிகள்.எதிர்பாராத ட்வீஸ்ட்கள் என நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கும்.நீங்கள் சினிமா தேடும் நபராக இருந்தால், இதோ உங்களுக்கான "Top Hollywood Movies" லிஸ்ட். இந்த டாப் 5 ஹாலிவுட் மாஷ்டர்பீஸ் திரைப்படங்கள் உங்கள் விக்கெண்டை வெறித்தனமாக மற்றும்வந்து உறுதி!

டாப் 5 ஹாலிவுட் க்ரைம் & த்ரில்லர் திரைப்படங்கள் மிஸ் பண்ணாம பாருங்கள் !

5. Goodfellas (1990)

  • Cast & Crew: ராபர்ட் டி நிரோ, ரே லியோட்டா, ஜோ பெஸ்சி. இயக்கம் :மார்ட்டின் ஸ்கார்செஷி.
  • Quick Plot:ஒரு சாதாரண பையன் மாஃபியா உலகிற்குள் நுழைந்து எப்படி ஒரு பெரிய கேங்ஸ்ட்ராக மாறுக்கிறான்,பிறகு அவனது குற்ற வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சரிவுகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் உண்மை சம்பவம்.
  • Brizv’s Take: மார்ட்டின் ஸ்கார்செஷி-யின் செதுக்கப்பட்ட திரைக்கதை மற்றும் ஜோ பெஸ்சியின் மிரட்டலான நடிப்பு இந்தப் படத்தை ஒரு எபிக் மாஷ்டர்பீஸ் ஆக மாற்றியுள்ளது. முதல் காட்சியில் இருந்தே உங்களை கட்டிப்போடும் வேகம் இதன் ஸ்பெஷல். நெகட்டிவ் பாய்ண்ட்: வன்முறை காட்சிகள் சற்று அதிகமாக இருப்பதால் ஆக்ஷ்ன் விரும்புவதர்களுக்கு இது கொஞ்சம் ஓவராகத் தெரியலாம்.
  • Where to watch: Netflix, Amazon Prime Video,தளங்களில் பார்க்கலாம்.

4. The Departed (2006)

  • Cast & Crew: லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜாக் நிக்கல்சன். இயக்கம்:மார்ட்டின் ஸ்கார்செஷி.
  • Quick Plot: போலீஸ் துறையில் ஒரு கிரிமினல் ஊடுருவுகிறான், அதே நேரம் கேங்ஸ்டர் கூட்டத்தில் ஒரு போலீஸ் அண்டர்கவர் ஏஜெண்டாக இணைகிறான்.இவர்களுக்கும் நடக்கும் எலி - பூனை ஆட்டம் தான் இந்த கதை
  • Brizv’s Take: லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமனின் நடிப்பில் வேற லெவல்! சஸ்பென்ஸ் மற்றும் ட்வீஸ்ட்கள் நிறைந்த இந்த Best Thriller movie உங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் பக்கா த்ரில் கொடுக்கும். படத்தின் கிளைமேக்ஸ் பலரையும் ஷாக் ஆக்கும். நெகட்டிவ் பாய்ண்ட்: படத்தில் கேட்ட வார்த்தைகளும், வயலன்சிம் அதிகம் என்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்க்கவும்
  • Where to watch: Netfllix, Amazon Prime Video, Apple TVதளங்களில் பார்க்கலாம்.

3. Pulp Fiction (1994)

  • Cast & Crew:ஜான் ட்ரவோல்டா, சாமுவேல் எல். ஜாக்சன், உமா தர்மன். இயக்கம்:குவெண்டின் டாரண்டினோ.
  • Quick Plot:இரண்டு கொலையாளிகள்,ஒரு பாக்ஸர், ஒரு கேங்ஸ்டர் மற்றும் அவனது மனைவி அகிடோரின் வாழ்க்கையில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று இணைகிறது என்பதே கதை.
  • Brizv’s Take:குவெண்டின் டாரண்டினோவின் டிரேட்மார் Non -Linear திரைக்கதை மற்றும் டார்க் காமெடி இந்த படத்திற்கு உயிரூட்டுகிறது. சாமுவேல் எல்.ஜாக்சனின் மாஷான வசன உச்சரிப்புகள் உங்களுக்கு கூஷ்பம்ப்ஸ் கொடுக்கும். நெகட்டிவ் பாய்ண்ட்:முதல் முறை பார்க்கும்போது,கதையின் முன்னும் பின்னுமாக காலா அமைப்பு சிலருக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்.
  • Where to watch: Netflix, JioHotstar தளங்களில் பார்க்கலாம்.

2. The Dark Knight (2008)

  • Cast & Crew:கிறிஸ்டியன் பேல், ஹீத் லெட்ஜர், மேகி கிலென்ஹால். இயக்கம்:க்ரிஸ்டோபர் நோலன்.
  • Quick Plot:கோதம் நகரை காப்பாற்ற பேட்மேன் போராடும் போது, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத ஜோக்கர் என்ற சைக்கோ கிரிமினல் எப்படி அவரை மனதளவில் சவாலுக்கு உள்ளாக்குகிறான் என்பது தான் கதை.
  • Brizv’s Take:க்ரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது மட்டுமில்லாமல்,சூப்பர் ஹீரோ படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.ஹீத் லெட்ஜர் ஜோக்கர் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.ஹான்ஸ் ஜிம்மரின் BGM ஒரு சைக்கலாஜிக்கல் மாஷ்டர்பிஷான இதற்கு பெரும் பலம். நெகட்டிவ் பாய்ண்ட்: படத்தின் நீளம் சற்று அதிகம், அனல் திரைக்கதையின் வேகம் அடஹி மறக்கடித்துவிடும்.
  • Where to watch:Netflix, Amazon Prime Video, JioHotstar தளங்களில் பார்க்கலாம்.

1. The Godfather (1972)

  • Cast & Crew:மார்லன் பிராண்டோ, அல் பாசினோ,டயான் கீட்டன். இயக்கம் : பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா.
  • Quick Plot:அமெரிக்காவின் சக்திவாய்ந்த 'கோர்லியோன்' மாஃபியா குடும்பத்தின் தலைவரான டான் விட்டோ கோர்லியோன் மற்றும் அவரது மகன் மைக்கேல் கோர்லியோன் ஆகியோர் தங்களது சாம்ராஜ்யத்தை தந்திரமான எதிரிகளிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.
  • Brizv’s Take:உலக சினிமா வரலாற்றில் 'The Godfather' படத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.ஒரு கேங்ஸ்டர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுதான் பைபிள்.அல் பசினோவின் மாஸ் கம்பேக் மற்றும் மார்லன் பிராண்டோவின் நடிப்பு எல்லாமே சினிமா ரசிகர்களுக்கான ஒரு பாடம்.உலகத்தின் Best Hollywood movies லிஸ்டில் இதற்கு எப்பொழுதும் முதலிடம் தான். நெகட்டிவ் பாய்ண்ட்: படம் மெதுவாக நகரும்,எனவே அதிரடி ஆக்க்ஷன் விரும்பிகளுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கலாம்.
  • Where to watch: Amazon Prime Video, JioHotstar தளங்களில் பார்க்கலாம்.