இணையத்தை அதிர வைத்த மிஸ்டர் பைசு ரகசியத் திருமணம்
இன்ஸ்டாகிராம் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை இளைஞர்களின் ஸ்லைலிஷ் ஐகானாக வளம் வரும் மிஸ்டர் பைசு ஒரு வழியாகத் தனது பேச்சலர் வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பல மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள இவருக்குத் திருமணம் என்பது இவருக்கு எப்போது என்று பெரும் விவாதமாகவே இருந்தது.அந்த விவாதத்திற்குப் பதில் கூறும் விதமாக இன்று புனித நகரமான மதீனாவில் ரகசியமாக நடைபெற்ற இவரது திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தை அதிரவைக்கிறது

மிஸ்டர் பைசு எளிமையான திருமணம்
சமூக வலைத்தளங்களில் ஒரு சாமானிய இளைஞனாகத் தொடங்கி, இன்று பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான புகழைப் பெற்றுள்ளவர் பைசல் ஷேக் என்ற மிஸ்டர் பைசு . டிஜிட்டல் கிரியேட்டராகத் தனது பயணத்தைத் தொடங்கி,பின் கத்ரோன் கே கிலாடி மற்றும் ஜலக் திக்லா ஜா போன்ற முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது வெளியாகியுள்ள தக்கவைகளின்படி மிஸ்டர் பைசு தந்து திருமணத்தைப் புனித நகரமான மதீனாவில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் முடித்துள்ளார்.